தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2018 2:00 AM IST (Updated: 17 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

கோவில்பட்டி,

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பியாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முருகேசுவரி. இவர்கள் 2 பேரும் கடந்த 6–5–2010 அன்று பக்கத்து ஊரான பொம்மையாபுரத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் உணவு பொருட்களை வாங்க சென்றனர். அப்போது பொம்மையாபுரத்தைச் சேர்ந்த ராஜய்யா மகன் கூலி தொழிலாளி கார்த்திகேயனும் (35) ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது அவருக்கும், செல்வராஜிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அரிவாளால் செல்வராஜை வெட்ட முயன்றார். இதனை தடுக்க முயன்ற முருகேசுவரியை கார்த்திகேயன் கீழே தள்ளி விட்டார். பின்னர் கார்த்திகேயன் அரிவாளால் செல்வராஜின் கையில் வெட்டினார். இதில் செல்வராஜின் விரல் துண்டானது.

5 ஆண்டு சிறை தண்டனை


இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த வழக்கு கோவில்பட்டி சப்– கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பாபுலால் விசாரித்து, செல்வராஜை அரிவாளால் வெட்டிய கார்த்திகேயனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Next Story