திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் சார்பில் அனைத்திந்திய மாநில அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை சேர்ந்த 350 அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகி டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை இந்திய மருத்துவ சங்க முன்னாள் செயலாளர் தேவானந்து, தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை கைவிடுதலின் அவசியத்தை விளக்கி கூறினார். டாக்டர்கள் சுபலட்சுமி, நாகராஜன், பிரகாஷ் ஆகியோர் மீண்டும் பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தையும், தமிழக அரசு டாக்டர்களின் ஊதிய முரண்பாடுகளையும் விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணை சட்ட மசோதாவை கைவிட வேண்டும். மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story