சொன்னபடி முக்கிய தகவலை வெளியிடாததால் எடியூரப்பா மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
சொன்னபடி முக்கிய தகவலை வெளியிடாததால் எடியூரப்பா மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பெங்களூரு,
சொன்னபடி முக்கிய தகவலை வெளியிடாததால் எடியூரப்பா மீது காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் கடும் விமர்சனம்
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நாளை(நேற்று) மாலை 5 மணிக்கு ஒரு முக்கியமான(பிரேக்கிங் நியூஸ்) தகவலை வெளியிடுகிறேன்“ என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது ஏதாவது ஊழல்களை பகிரங்கப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்த நிலையில் எடியூரப்பா அறிவித்தப்படி மாலை 5 மணிக்கு டுவிட்டரில் எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதனால் எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இந்த விஷயத்தில் எடியூரப்பாவை காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாதவர் எடியூரப்பா. இது சொல் முறைகேடு. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாதவர், மக்களின் எதிர்பார்ப்புகளை எடியூரப்பா நிறைவேற்றுவாரா?“ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
முறைகேடான வழியில்...
மேலும் கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராதாகிருஷ்ணா கூறுகையில், “வீரப்பமொய்லியின் டுவிட்டர் கணக்கை பா.ஜனதா முறைகேடான வழியில் பயன்படுத்தி இருப்பது தற்போது தெளிவாக தெரிகிறது. முக்கிய செய்தியை வெளியிடுவதாக கூறிய எடியூரப்பா, அதில் இருந்து ஓடி மறைந்துகொண்டார். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது“ என்றார்.

Related Tags :
Next Story