மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை நாளை முதல் அமலாகிறது
மராட்டியத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதிப்பதாக சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம் தெரிவித்தார்.
மும்பை,

பிளாஸ்டிக்கிற்கு தடை
மராட்டிய புத்தாண்டான ‘குடிபட்வா’ நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய சட்டசபையில் பேசிய சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம், இந்த புத்தாண்டு முதல் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, வினியோகம் என பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கும் தடைவிதிக்க உள்ளதாக கூறினார்.
மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வரும் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள், தெர்மகோல் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தட்டுகள், ‘கப்’கள், கிண்ணங்கள், கரண்டிகள் போன்றவற்றுக்கு இந்த தடை பொருந்தும். அதே நேரத்தில் மருந்துகள், உரக் கலவைகள், திடக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு பிளாஸ்டிக் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மறுசுழற்சி
மேலும் பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவை 50 மைக்ரான் தடிமனுக்கு குறையாமல் இருப்பதோடு, மறுசுழற்சி செய்யத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும். இதற்காக பால் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தப்பட்ட பால்பாக்கெட்டுகளை பொதுமக்களிடம் இருந்து விலைக்கு வாங்கலாம்.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகும். இது முழுக்க முழுக்க தண்ணீர் பாட்டில்கள் உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும். இதற்காக 3 மாதத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் தயாரிப்பு நிலையங்கள் அதற்கான மறுசுழற்சி மையங்களை தாங்களே அமைக்க வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு அவற்றிற்கும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு மந்திரி ராம்தாஸ் கதம் கூறினார்.

Related Tags :
Next Story