எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம்: தமிழ் முதல்தாளை 22,668 மாணவ, மாணவிகள் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இதில் தமிழ் முதல்தாள் தேர்வை 22 ஆயிரத்து 668 பேர் எழுதினர். 381 பேர் தேர்வுக்கு வரவில்லை.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 311 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 882 மாணவர்கள், 10 ஆயிரத்து 708 மாணவிகள் என 22 ஆயிரத்து 590 மாணவ, மாணவிகளும், 501 தனித்தேர்வர்களும் என மொத்தம் 23 ஆயிரத்து 91 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 88 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. முதல்நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுத 23 ஆயிரத்து 58 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 237 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 344 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
தனித்தேர்வர்களை பொறுத்த வரையில் தமிழ் முதல் தாள் தேர்வை 468 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 431 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 37 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தமாக தமிழ் முதல்தாள் தேர்வை 22 ஆயிரத்து 668 பேர் எழுதினர். இதேபோல் 344 மாணவ, மாணவிகள், 37 தனித்தேர்வர்கள் என 381 பேர் எழுதவில்லை.
இந்த தேர்வு பணியில் மாவட்டம் முழுவதும் 88 முதன்மை கண்காணிப்பாளர்கள், 88 துறை அலுவலர்கள், 252 பேர் கொண்ட பறக்கும் படை, 1,990அறை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் என சுமார் 2 ஆயிரத்து 418 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக நாமக்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வில் பங்கேற்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

Related Tags :
Next Story