பேட்டரியால் இயக்கப்படும் ‘ஹைபேர்டு’ ரக ஏ.சி. பஸ்கள் அறிமுகம் முதல்- மந்திரி பட்னாவிஸ் சேவையை தொடங்கி வைத்தார்
மும்பையில் பேட்டரியால் இயக்கப்படும் ‘ஹைபேர்டு’ ரக ஏ.சி. பஸ்களின் சேவையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
மும்பை,

முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்
மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பேட்டரியால் இயக்கப்படும் 25 ‘ஹைபேர்டு’ ரக ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பெஸ்ட் போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ‘ஹைபேர்டு’ பஸ்கள் பெஸ்ட் நிறுவனத்தால் இயக்கப்பட உள்ளது. இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த விழாவில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு ‘ஹைபேர்டு’ பஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ்கள் மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் இருந்து தானே, போரிவிலி, மற்றும் பல பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்சில் பயணம் செய்ய ரூ.15 முதல் ரூ.130 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள்...
‘ஹைபேர்டு’ ரக பஸ்கள் தற்போது தான் மும்பையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் 30 முதல் 35 சதவீதம் வரை எரிபொருள் பயன்பாடு குறையும். மேலும் காற்று மாசு அடைவதும் குறையும். தலா ரூ.1¾ கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சொகுசு இருக்கைகளும், செல்போன் சார்ஜ் போடும் வசதி, வை-பை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த பஸ்சில் டிரைவருடன் சேர்த்து 32 பேர் உட்கார்ந்து பயணம் செய்யலாம். 28 பேர் நின்று பயணம் செய்யும் அளவிற்கு இடவசதியும் உள்ளது.

Related Tags :
Next Story