மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. இந்த இடத்தை பொது மக்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி கொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீசு வழங்கினர். இருப்பினும் அவர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை.
இதையடுத்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றினர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் கேசவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், கிராம உதவியாளர் கண்ணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரபாலன், சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story