உடல் மாதிரிகளை வைத்து செவிலியர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


உடல் மாதிரிகளை வைத்து செவிலியர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 March 2018 5:04 AM IST (Updated: 17 March 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் உடல் மாதிரிகளை வைத்து நோய் தீர்க்கும் முறை குறித்து செவிலியர்களுக்கான பயிற்சியினை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

தமிழகத்திலேயே முதல் முறையாக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் உடல் மாதிரிகளை வைத்து நோய் தீர்க்கும் முறை குறித்து செவிலியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செவிலியர் என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும். எந்த சூழ்நிலையிலும் நோயாளிகளிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் சேவையை சிறப்பாக மேற்கொள்ளலாம். செவிலியர்கள் நோய் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டத்தில் முதன் முறையாக உடல் மாதிரிகளை வைத்து செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக மருத்துவகல்லூரிக்கென ரூ.14 லட்சம் மதிப்பில் உடல் மாதிரிகள், உடல் நோய் மாதிரிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் செவிலியர்கள் பயிற்சியாளர் பிரின்சி பெர்னான்டோ, திருவாரூர் துணை முதல்வர் சுமதி, இந்திய மயக்க மருத்துவர்கள் சங்க கிளை தலைவர் பார்த்தசாரதி, துணை கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் அப்துல்ஹமீது அன்சாரி, டாக்டர் ராமச்சந்திரன், லெனின், செவிலிய கண்காணிப்பாளர் பத்மா, செவிலியர் சங்க செயலாளர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story