புதிய பாலத்தில் திடீரென போக்குவரத்து தொடங்கியதால் பரபரப்பு
சீர்காழியில் பணி முழுமை பெறாத புதிய பாலத்தில் திடீரென போக்குவரத்து தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி,
சீர்காழி கொள்ளிடமுக்கூட்டு நகரின் முக்கிய சந்திப்பாகும். சீர்காழி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் கழுமலையாற்றின் பிரிவு வாய்க்காலில் குறுகிய பாலம் இருந்து வந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. இதனால் சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழிதடத்தில் சிக்கி கொள்வதால் பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பெரும் அவதி குள்ளாகி வந்தனர். இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மூலம் குறுகிய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி ரூ.13 லட்சம் மதிப்பில் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனால் இந்த வழிதடத்தின் வழியாக நகருக்குள் வரும் பஸ்கள் அனைத்தும் புறவழிச்சாலை வழியாக புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பாலப்பணி தொடங்கிய நாள் முதல் பெரும்பாலான பஸ்கள் நகரத்திற்குள் வந்து செல்லாமல் புறவழிச்சாலை, கோவில்பத்து சந்திப்பு, செங்கமேடு சந்திப்பு, பனமங்கலம் சந்திப்பு ஆகிய சந்திப்புகளில் நடுவழியில் பயணிகளை பஸ்சில் இருந்து இரவு, பகல் பாராமல் இறக்கவிட்டு சென்றனர்.
இதனால் பள்ளி மற்றும் தேர்வுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நகரத்திற்கு வரும் பெண்கள், முதியோர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் பஸ்கள் வழக்கம்போல் புறவழிச்சாலையில் சென்று வந்தன. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் பொது மக்கள் பட்ட சிரமத்தை கண்டும், காணாமல் இருந்து விட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில் 25 நாட்களுக்கு பிறகு பாலத்தின் பணிகள் 80 சதவீதம் முடிக்கப்பட்டு விட்டன. மீதம் பாலத்தின் இருபக்கங்களிலும் இணைப்புசாலை மற்றும் பாலத்தின் பக்கவாட்டு மதகுகள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளன. இந்நிலையில் நேற்று திடீரென புதிய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைகள் இணைப்பு இல்லாததால் கடும் சிரமங்களுக்கு இடையே வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தாலும், பாலத்தை கடக்கும் போது ஏற்படும் புழுதியில் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே பாலத்தின் முழுபணிகளையும் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய பாலம் திடீர் திறப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள், தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வழக்கம்போல் எளிய பயண தூரத்தை கடந்து செல்வதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story