பூமியை அச்சுறுத்தும் சீன விண்வெளி நிலையம்
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம், உயிராபத்தை ஏற்படுத்தும் அமிலங்களுடன் பூமியில் மோதக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீன விண்வெளி நிலையத்தின் பெயர், டியான்கோங்-1. சீனாவின் இந்த முதல் விண்வெளி நிலையம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் எட்டரை டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம், இம்மாதம் 29-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ம் தேதிக்குள் ஒரு நாள் பூமியில் மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பூமி நோக்கி விரையும் இந்த விண்வெளி நிலையம் குறித்து உலகெங்கிலும் இருந்து கண்காணித்துவரும் விஞ்ஞானிகள், ஐரோப்பிய கண்டம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒன்றில் இந்நிலையம் மோத வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர்.
அதோடு, பூமியை நெருங்கும்போது அந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் உடைந்து பூமியில் பதியும்போது மட்டுமே அதன் தாக்கம் குறித்து உறுதியான கருத்துகளை வெளியிட முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பூமியில் உறுதியாக எங்கே மோதும் என கணிக்க முடியாவிட்டாலும், அமெரிக்காவின் வடக்குப் பகுதிகள், மத்திய இத்தாலி, ஸ்பெயின் நாட்டின் வடபகுதி, சீனாவின் வடபகுதி, ஐக்கிய அமீரக நாடுகள், தென்ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சீன விண்வெளி நிலையம் மோத அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வாரத்துக்கு 6 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த விண்வெளி நிலையத்தில் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் ‘ஹைட்ரஸைன்’ என்ற உயிர் கொல்லும் அமிலம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ராக்கெட்டுக்கு எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய ஹைட்ரஸைன், ஒரு நிறமற்ற, வழுவழுப்பான திராவகமாகும்.
இந்தத் திராவகத்தால் நேரிடையாக பாதிக்கப்படுபவர்கள் கோமா நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
டியான்கோங்-1 விண்வெளி நிலையம் கடந்த 2011-ம் ஆண்டு சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story