புலிகள் காப்பகத்துடன் வனப்பகுதியை இணைக்க எதிர்ப்பு: தடிக்காரன்கோணத்தில் சத்தியாகிரக போராட்டம்


புலிகள் காப்பகத்துடன் வனப்பகுதியை இணைக்க எதிர்ப்பு: தடிக்காரன்கோணத்தில் சத்தியாகிரக போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 17 March 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடிக்காரன்கோணம் சந்திப்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

அழகியபாண்டியபுரம்,

களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடிக்காரன்கோணம் சந்திப்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கன்னியாகுமரி விவசாயிகள் தொழிலாளர் நலச்சங்கம், குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம், புலிகள் சரணாலய எதிர்ப்பு இயக்கம் ஆகியவை சார்பில் நடைபெற்றது.

விவசாய தொழிலாளர் நல சங்க செயலாளர் ரவி தலைமை தாங்கினார். போராட்டத்தை பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ் தொடங்கி வைத்தார். இதில் அருள்தாஸ், பிராங்கிளின், தங்கப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story