திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2018 4:15 AM IST (Updated: 18 March 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார்.

ஊராட்சி செயலாளருக்கு, பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட செயலாளர் வசந்தன், மாவட்ட பொருளாளர் செந்தில், மா வட்ட துணைத்தலைவர்கள் சிவக்குமார், சிவசுப்பிரமணியன், ராஜசேகரன் முருகானந்தம், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story