பாரதீய ஜனதாவின் மிரட்டலால் தான் என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினர், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி பேட்டி
பாரதீய ஜனதாவின் மிரட்டலால்தான் அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கியுள்ளனர் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறினார்.
கோவை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கட்சி ஒப்புதல் இல்லாமல் பேட்டியளித்த வேணுகோபால் எம்.பி.யை கட்சியைவிட்டு நீக்கவில்லை. ஆனால் என்னை நீக்கியுள்ளனர். எப்போது அவரை கட்சியை விட்டு நீக்கப்போகிறார்கள்?. பாரதீய ஜனதாவிற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க.வை விட்டு ஏன் நீக்குகின்றனர் என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதீய ஜனதாவிற்கு எதிராக அ.தி.மு.க வாக்களிக்க வேண்டும்.
இரு அணிகள் இணைந்த பின்னர் 15 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. அ.தி.மு.க சட்டவிதி திருத்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் சட்ட விதிகள் பரிசீலனையில் இருப்பதாகவும், அ.தி.மு.க சட்டவிதி திருத்தங்கள் இதுவரை ஏற்கப்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமை என்பது சரியாக இருக்காது. ஒற்றை தலைமையே தேவை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே வரவு செலவு சரியாக பார்த்துக்கொள்கிறார்கள். இருவரின் சுயநலத்திற்காக கட்சியினரை பலிகொடுக்ககூடாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ராஜினாமா செய்ய வேண்டும். இருவரும் கட்சி பொறுப்பில் இருந்தும் விலகிக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க தொண்டர்களை அவர்கள் ஏமாற்றக்கூடாது. என்னை அவர்கள் கட்சியைவிட்டு நீக்கினாலும், நான் வேறு அணிக்கோ, வேறு கட்சிக்கோ செல்லப் போவதில்லை. வருகிற 31-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் அரசியலில் ஈடுபடாமல் நான் முழுமையாக ஒதுங்கி விடுகிறேன்.
எனக்கு வந்த தகவலின்படி, பாரதீய ஜனதாவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மிரட்டப்பட்டதாகவும் அதன் காரணமாகவே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. டெல்லி உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து என்னை நீக்கி இருக்கின்றனர். அ.தி.மு.க சட்டவிதியில் திருத்தங்களை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு செய்த போது ஏன் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?
அணிகள் இணைப்புக்காக நானும் பாடுபட்டேன். அணிகள் இணைந்த பின்பு கட்சி நிர்வாகிகளிடம் நான் எதுவும் விவாதிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. ஒன்றும் பண்ணையில்லை. உள்நோக்கத்துடன் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். என்ன உள்நோக்கத்துடன் பேசினேன் என்பதை அவர் விளக்கவேண்டும். நான் எப்போதும் அ.தி.மு.க.காரன்தான். வேறு எங்கும் போகமாட்டேன்.
அ.தி.மு.க, பாரதீய ஜனதாவின் கைப்பாவையாகி விட்டது. இந்த ஆட்சியை கடைசி வரைக்கும் ஓட்டி சென்று தங்களை வளப்படுத்தி கொள்ளவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல் படுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க. தன்னுடைய நிலைப்பாட்டை ஏன் அறிவிக்கவில்லை?. அ.தி.மு.க தன் நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம் இது.
அ.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட எல்லை மீறி பேசுகின்றனர், ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர். வேணுகோபால் எம்.பி. கட்சி சொல்லாமல் கருத்து சொல்கிறார். அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுப்பதில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததைபோல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடியுமா?.
எச்.ராஜா, சுப்பிரமணியசாமி போன்றோர் கட்சியையும், அ.தி.மு.க.வினரையும் இழிவாக பேசுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஓ.பன்னீர் செல்வம், மோடி சொல்லியதன் பேரில் இணைந்தேன் என்றார். சசிகலா ராஜினாமா கடிதம் கேட்டதால் கொடுத்தேன் என்கிறார். அப்படியானால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்த அறிவு இல்லையா?.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story