சிறுபான்மையினர் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
சிறுபான்மையின மக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பிரகாஷ் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையின பொதுமக்களுக்கான மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கி, சிறுபான்மையின பொதுமக்களுக்கான மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்தார். பின்னர் சிறுபான்மையின ஆணைய தலைவர் பிரகாஷ் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் அரசு திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் சீரமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ள உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தேவையான மருத்துவ சிசிச்சைகள் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய-மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தேவைக்கேற்ப பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், சுயஉதவிக் குழுக்கள் மூலம் தொழில் பயிற்சியுடன் வங்கிக்கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதேபோல் உலமாக்களுக்கும் நலவாரியம் அமைக்கப்பட்டு அதன்மூலம் உதவித்தொகை மற்றும் கல்விக்கடன், தொழில் கடன் போன்ற நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துடன் டாம்கோ மூலம் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சிறுபான்மையின பொதுமக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜேம்ஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story