மணல் திருட்டை தடுக்க பள்ளம் தோண்டிய கிராம மக்கள்
மணல் திருட்டை தடுக்க கிராம மக்கள் பள்ளம் தோண்டியுள்ளனர்
சோழவந்தான்,
மதுரை மாவட்டத்திற்குட்பட்ட வைகைஆற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் அதிக அளவில் உள்ள கிராமங்களாக திருவேடகம் மற்றும் மேலக்கால், குருவித்துறை, மன்னாடி மங்களம் ஆகியவை உள்ளன. இதில் திருவேடகம் மற்றும் மேலக்கால் ஆகிய கிராமப் பகுதி வைகைஆற்றில் கருமாத்துார் கூட்டு குடிநீர்திட்டத்தில் திருநகர், திருமங்கலம், அவனியாபுரம், சமயநல்லூர், விளாங்குடி, மதுரை மாநகராட்சி உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு சுமார் 58 கிணறுகள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 5 முதல் 7 கோடி லிடடர் குடிநீர் உயர் அழுத்த மின் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு தினமும் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் திருவேடகம், தச்சம்பத்து, நந்தவனம் பகுதி வைகைஆற்றில் தினமும் இரவு-பகல் பாராமல் லாரி, மாட்டுவண்டி, டிராக்டர், இருசக்கர வாகனம் மற்றும் தலைச்சுமையாக மணல் கடத்தப்படுகிறது. இதனால் ஆற்றின் உள்பகுதி பள்ளமாக மாறி பாறைகள் வெளியே தென்படுகின்றது.
மணல் திருட்டை தடுக்கும் நடவடிக்கையாக திருவேடகம் கிராம பொதுமக்கள் தச்சம்பத்து மாநகராட்சி நீரேற்றும் நிலையம் அருகேயும் சதுர்வேத விநாயகர் கோவில் அருகிலும் உள்ள மணல் திருட்டுக்கு பயன்படுத்தும் பாதையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் மண் அள்ளும் எந்திரம் உதவியோடு பெரிய பள்ளம் தோண்டி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வைகைஆற்றில் மணல் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய பாசன கால்வாயில் நீர்வரத்து மேற்கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story