ஆறும் கடலும் சங்கமிக்கும் ஆற்றங்கரையில் படகு சவாரி தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆற்றங்கரை பகுதியில் ஆறும்கடலும் சங்கமிக்கும் இடத்தில் படகு சவாரி தொடங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
பனைக்குளம்,
நீண்ட நெடிய கடற்பரப்பை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் என்பது மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன. குறிப்பாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், அரியமான், குந்துகால், தேவிபட்டினம் போன்ற இடங்களுக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இதேபோல இயற்கை அழகும், நீண்ட கடற்கரையும் கொண்ட பகுதிகள் இந்த மாவட்டத்தில் ஏராளமாக உள்ளன. வாலிநோக்கம், தொண்டி போன்ற ஊர்களில் கடற்கரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தாலும் நீண்ட தொலைவு காரணமாக இன்னும் பொதுமக்களை வெகுவாக கவரவில்லை.
ஆனால் ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரையிலான பகுதியில் சீனியப்பாதர்கா போன்ற கிராம பகுதியில் கடற்கரை இயற்கை எழிலோடு அமைந்துள்ளது. இந்த நிலையில் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட பனைக்குளம்-அழகன்குளம் இடையே நதிப்பாலம் வழியாக வைகை ஆற்று தண்ணீர் ஆற்றங்கரை பகுதியில் கடலில் கலக்கிறது. ஆறும் கடலும் சங்கமிக்கும் இந்த பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டி தோப்பு, வயல் பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் ஆற்றங்கரை பகுதி ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பெருங்குளம் பகுதியில் இருந்து தொடங்கி செம்படையார்குளம், சேர்வைக்காரன் ஊருணி, ஆற்றங்கரை பஸ் நிறுத்தம், நாகாச்சி வரையிலும் ஆற்று நீரும், கடல் நீரும் சங்கமித்து ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும். மேலும் அதன் அருகில் உள்ள பகுதி முழுவதும் தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளதால் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
இந்நிலையில் இந்த இயற்கை அழகை அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மறைத்து விடுகின்றன. எனவே இந்த பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி விட்டு நிழல் தரும் மரங்களையும், பழக்கன்றுகளையும் நட்டு பூங்கா அமைக்க வேண்டும். மேலும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தால் சுற்று வட்டார பகுதி மக்களும், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.
இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றவேண்டும், படகு சவாரி தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

Related Tags :
Next Story