விபத்தில் கணவர் இறப்பு: பெண்ணுக்கு இன்சூரன்ஸ் தொகை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், மதுரை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
விபத்தில் கணவர் இறந்ததற்கான இன்சூரன்ஸ் தொகை ரூ.10 லட்சத்தை பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று மதுரை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
மதுரை,
மதுரை திருமோகூரை சேர்ந்த அண்ணாதுரைஉஷா (வயது 25), மதுரை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது கணவர் பாலசுப்பிரமணி(27) மதுரை கே.கே.நகரில் உள்ள தேசிய வங்கி கிளையில் கணக்கு தொடங்கினார். அந்த கணக்கில் அவருக்கு ரூ.10 லட்சம் விபத்து இன்சூரன்ஸ் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 19.3.2014 முதல் 18.3.2015 வரையிலான நாட்களுக்கு பிரீமியதொகை செலுத்தியிருந்தார். இந்தநிலையில் 24.3.2014 அன்று ஒத்தக்கடையில் இருந்து திருமோகூருக்கு எனது கணவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்கவில்லை. இதனால் எதிர்பாராதவிதமாக வேகத்தடையில் மோதி கீழே விழுந்ததில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் சில நாட்களில் இறந்துவிட்டார். இதனையடுத்து அவருடைய இறப்புக்கான விபத்து இன்சூரன்ஸ் தொகையை இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தேன். இதற்காக எப்.ஐ.ஆர். நகல், பிரேத பரிசோதனை சான்றிதழ், டாக்டர் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்திருந்தேன். எனது விண்ணப்பத்தின் மீது 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திடீரென இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்த கடிதத்தில், ‘உங்கள் கணவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து உள்நோயாளியாக இருந்ததற்கான ஆவணங்களை பெற்று அனுப்புங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அதை தரமுடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதற்கிடையே அந்த ஆவணங்களை கொடுக்காததால் உங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்க முடியாது என்று கூறி எனது விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது. எனவே எனது கணவர் இறப்புக்கு உரிய விபத்து இன்சூரன்ஸ் தொகையையும், எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, மறைக்காமலை ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரர் கணவர் விபத்தில் தான் இறந்தார் என்பதற்கான ஆதாரங்களாக எப்.ஐ.ஆர். நகல், பிரேதபரிசோதனை அறிக்கை, டாக்டர் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இன்சூரன்ஸ் தொகையை வழங்குவதற்கு அவை போதுமானவை. ஆனாலும் உரிய தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரரை அலைக்கழித்துள்ளது. எனவே அவருக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை ரூ.10 லட்சத்தை மனு தாக்கல் செய்த நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மனுதாரரின் மனஉளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story