வள்ளியூர் அருகே விபரீதம்:பள்ளிக்கூட விழாவில் மின்விளக்குகளால் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட 200 பேருக்கு கண் பார்வை பாதிப்பு
பள்ளிக்கூட விழாவில் மின்விளக்குகளால் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட 200 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.
வள்ளியூர்,
பள்ளிக்கூட விழாவில் மின்விளக்குகளால் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட 200 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவர்கள் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூட தாளாளர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் அருகே நடந்த இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது பொத்தையடி கிராமம். இங்கு எஸ்.வி. இந்து தொடக்கப்பள்ளி என்னும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் பொத்தையடி, பாலசுப்பிரமணியபுரம், காந்தி காலனி, கோவில்வாசல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தின் தாளாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் உள்ளார்.
ஆண்டு விழா
பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி வளாகம் குறுகலாக இருந்ததால் பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் அந்த வகுப்பறை முழுவதும் வெளிச்சம் பாய்ச்சும் வகையில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு இருந்தன.
வகுப்பறையின் ஒரு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அதன் எதிரே போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானவர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். கிராமப்புற பள்ளிக்கூடம் என்பதால் அந்த பகுதியில் உள்ளவர்களும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
கண் எரிச்சல்
மதியம் 2 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிகள் மாலை 5 மணி வரை நடந்தது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வீடுகளுக்கு திரும்பினர். நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடித்துவிட்ட மனநிறைவுடன் ஆசிரிய- ஆசிரியர்களும் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இரவு 10 மணி அளவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்களுக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் அவரவர் வீடுகளில், ‘நமக்கு மட்டும்தான் இப்படி கண் எரிகிறது’ என நினைத்து தூங்கி விட்டனர்.
பரபரப்பு
ஆனால், நேற்று காலையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கண் எரிச்சல் தீரவில்லை. மாறாக கண் வீக்கமாக இருந்தது. சிவப்பு நிறமாக மாறிவிட்டது. இதனால் ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்தனர். மேலும், கண் பார்வை பாதிக்கப்பட்டு எதிரே இருக்கும் பொருட்கள் மங்கலாக தெரிய தொடங்கியதாக தெரிகிறது. இதனால் பொத்தையடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பதறி துடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பள்ளிக்கூட தாளாளர் பாலசுப்பிரமணியன், அங்கு வந்து மாணவர்கள், பெற்றோர்களிடம் இதுதொடர்பாக கேட்டறிந்தார். உடனே 3 வேன்கள் மூலம் அவர்களை நெல்லை சந்திப்பில் உள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக குவிந்ததால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை
உடனே அவர்களுக்கு டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, உதவி கலெக்டர்கள் ஆகாஷ், மைதிலி, தாசில்தார் கணேசன் மற்றும் அதிகாரிகள் அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
நெல்லை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினரும் வந்து சிகிச்சை விவரங்களை கேட்டறிந்து சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் சொட்டு மருந்து விடப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரவிந்த் ஆஸ்பத்திரியில் மட்டும் 115 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர் விளக்கம்
இதுகுறித்து டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்கினால்தான் கண்களில் வீக்கம், நீர்வடிதல், பார்வை மங்கலாக தெரிதல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக சிகிச்சை அளித்து கண்களில் மருந்து விட்டோம். தொடர்ந்து 3 நாட்கள் கண்களில் சொட்டு மருந்து விட்டால் சரியாகி விடும். வெல்டிங் பிடிக்கும் போது வருகிற வெளிச்சம் போல் அதிக வெளிச்சத்தை கண்கள் நேரடியாக எதிர்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தால் இந்த பாதிப்பை தவிர்த்து இருக்கலாம். கண் எரிச்சல் உள்ளவர்களை கருப்பு கண்ணாடி அணிய சொல்லி இருக்கிறோம். மற்றபடி கண்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்றார்.
தாளாளர் கைது
இதற்கிடையே, சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அங்கே 55 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வள்ளியூர் தனியார் ஆஸ்பத்திரியில் 15 பேரும், ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கூட தாளாளர் பாலசுப்பிரமணியன், ஒலிபெருக்கி உரிமையாளர் ரமேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். ஒலிபெருக்கி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் 1,050 வாட்சுக்கு அதிகமாக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தியது, அதனால் காற்றை மாசுபடுத்தியது, கவனக்குறைவாக செயல்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story