பள்ளி-கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை


பள்ளி-கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2018 2:45 AM IST (Updated: 18 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி-கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்தார்.

பள்ளி-கல்லூரிகளில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்தார்.

பேட்டி

நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ- மாணவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி சந்தித்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஏர்வாடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடந்துள்ளது. அப்போது அதிக ஒளி வீசக்கூடிய மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் என விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கண் எரிச்சல், வலி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 நாட்கள் சிறப்பு முகாம்


அவர்களுக்கு கண்களில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாணவ- மாணவிகளின் சொந்த ஊருக்கு சென்று பார்வையிட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி விழாக்களில் அதிக ஒளிவீசக்கூடிய மின்விளக்குகளை பயன்படுத்த கூடாது. அப்படி மீறி யாராவது பயன்படுத்தினால் அவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த அளவு ஒளிவீசக்கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும், எந்த மின்விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story