வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவியிடம் சங்கிலி பறிப்பு
வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவியிடம் சங்கிலி பறிப்பு, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மகள் மைதிலி(வயது18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மைதிலியும் அவருடைய தோழிகள் இருவரும் கரியாப்பட்டினத்தில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். கரியாப்பட்டினம் புளியமரத்தடி நொச்சிக்குளம் அருகே சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மைதிலியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story