மத்திய அரசு மீது அ.தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா? துணை சபாநாயகர் பதில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில், மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா? என்ற கேள்விக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை பதில் அளித்தார்.
கரூர்,
தமிழகத்தின் உரிமைக்காகவும், நீராதாரத்தை பெறுவதற்காகவும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்து போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்திற்கு இன்னும் ஒரு முடிவு வரவில்லை. தொடர் போராட்டத்தினால் அவை ஒத்திவைக்கப்படுகிறது.
மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அதில் 4 வாரங்கள் முடிந்திருக்கிறது. மீதம் 2 வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.
பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகவில்லை. மக்களின் உரிமைக்காக தான் போராடுகிறோம். ஜனநாயக கடமையை ஆற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்கள். ராஜினாமா செய்துவிட்டால் ஒரே நாளில் அனைத்தும் முடிந்து விடும். அதன்பிறகு பாராளுமன்றம் நடந்துகொண்டே தான் இருக்கும். பின்பு தமிழகத்தின் உரிமை பறிபோய்விடும். அதனால் தான் ஜெயலலிதா வழியில் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், அதில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் அ.தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமா? என நிருபர்கள் தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதில் அளிக்கையில், “தெலுங்கு தேசம் கட்சி அவர்களது மாநில பிரச்சினைக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. அது அவர்களுடைய விருப்பம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 2 வார கால அவகாசம் இருக்கிறது. மத்திய அரசின் கவனத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறோம். இன்னும் 2 வார காலம் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story