விழா நடக்கும் போதே கண் எரிச்சல் இருந்தது பெற்றோர்கள் பேட்டி
நிகழ்ச்சி நடந்த போது ஆங்காங்கே மின்விளக்குள் எரிந்தன. அந்த விளக்குகளின் வெளிச்சத்தால் கண்கள் கூசின. எரிச்சலை ஏற்படுத்தியதுடன் கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.
பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்ட சூரியா என்ற பெண் கூறுகையில், ‘எனது மகள் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். ஆண்டு விழாவுக்கு என்னையும் அழைத்தாள். நானும் மகளின் நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஆசையாக சென்றேன். நிகழ்ச்சி நடந்த போது ஆங்காங்கே மின்விளக்குள் எரிந்தன. அந்த விளக்குகளின் வெளிச்சத்தால் கண்கள் கூசின. எரிச்சலை ஏற்படுத்தியதுடன் கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது. அப்போது அது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. மறுநாள் காலையிலும் கண் எரிச்சல் இருந்ததுடன் கண்கள் மங்கலாக தெரிந்தது. இதனால் பள்ளிக்கூடத்தின் வேனிலேயே ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இங்கு எங்களுடைய கண்களில் மருந்து விட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் கண்களில் மருந்து விடும்படியும், இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்’ என்றார்.
முத்துலட்சுமி என்ற பெண் கூறுகையில், ‘எனது 2 மகள்களும் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் நானும் சென்று இருந்தேன். எனது குழந்தைகளுக்கு இரவில் அதிக அளவில் கண் எரிச்சல் இருந்தது. தூங்கினால் சரியாகும் என நினைத்து இருந்தேன். அப்படி இருந்தும் சரியாகவில்லை. காலையிலும் கண் எரிச்சல் அதிகமாக இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு வந்தோம். ஆனால் விழா நடந்த போதே மின்விளக்குகளின் வெளிச்சத்தால் கண்களில் எரிச்சல் இருந்தது’ என்றார்.
மாணவ-மாணவிகள் கூறுகையில், ‘ஆண்டு விழாவின்போது மின்விளக்குகள் அதிக வெளிச்சமாக இருந்தது. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எங்களுக்கு கண்கள் கூசின. ஆனாலும் நாங்கள் நடனம், நாடகம் உள்ளிட்டவற்றில் ஆர்வமாக இருந்ததால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விழா முடிந்த பிறகும் கண்கள் கூசியதால் பெற்றோர்களிடம் கூறினோம். அவர்கள் எங்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்’ என்றனர்.

Related Tags :
Next Story