திருச்சியில் நவீன துப்பாக்கிகள் கண்காட்சி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த கண்காட்சியில், நவீன துப்பாக்கிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
திருச்சி,
திருச்சி நவல்பட்டு அருகே துப்பாக்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவத்துறைக்கும், மற்ற மாநிலங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் 217–வது படைக்கலத் தொழிற்சாலை தினம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொழிற்சாலை வளாகத்தில் நேற்று மாலை நவீன துப்பாக்கிகள் கண்காட்சி நடைபெற்றது.
இதனை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையின் பொது மேலாளர் ஷிரிஷ் கரே ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சியினை அவர் தனது மனைவி விதி கரேசுடன் பார்வையிட்டார். கண்காட்சியில் பழமையான மற்றும் நவீன ரக துப்பாக்கிகள், திருச்சி அசால்ட் ரைபிள் ரக துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் மற்றும் மல்டி கிரெனேட் லான்ச்சர் 40 எம்.எம்., அன்டர் பாரல் கிரெனேட் லான்ச்சர் 40 எம்.எம்., மல்டி ஷெல் லான்ச்சர் 38 எம்.எம்., டியர் கியாய்–ரப்பர் புல்லட் 30 எம்.எம். உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதனை திருச்சி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
அப்போது துப்பாக்கிகளை கையில் வைத்துக்கொண்டு, தங்களது செல்போனில் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளின் தன்மை குறித்து பொதுமக்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதிகாரிகளும் துப்பாக்கிகளின் ரகம் குறித்து எடுத்துரைத்தனர். கண்காட்சி நேற்று இரவுடன் முடிவடைந்தது. இரவில் கலை நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கை நடந்தது.
முன்னதாக பொது மேலாளர் ஷிரிஷ் கரே நிருபர்களிடம் கூறுகையில், “இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள் ரக துப்பாக்கிகள் 1,200 சத்தீஷ்கார் மாநில போலீசாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4,000 துப்பாக்கிகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரக துப்பாக்கிகள் மற்ற மாநிலங்களில் உள்ள போலீசாரிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் கேரளா, மத்தியபிரேதசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உள்ள போலீசார் திருச்சி அசால்ட் ரைபிள் ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளனர். 7.72*51 பி.கே.டி., ஏ.ஜி.*30 ஆகிய புதிய ரகங்கள் தயாரிக்கப்பட்டு பரிசோதனையில் உள்ளது. இவை அடுத்த நிதி ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. தற்போது தொழிற்சாலையில் 1,500 பேர் பணிபுரிகின்றனர். பணிச்சுமை அதிகமானால் கூடுதலாக ஊழியர்கள் நியமிப்பது குறித்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும்“ என்றார்.

Related Tags :
Next Story