லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் தொடங்கினால் போராட்டம், பா.ஜ.க. அறிவிப்பு
புதுவையில் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கினால் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.
புதுச்சேரி,
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எல்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி தங்களது ஆதரவாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தடை செய்யப்பட்ட ஏழை எளிய மக்கள் விரோத லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் தொடங்க அமைச்சர்களைக் கூட்டி திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏழை எளிய மக்கள் தங்களது 30 சதவீத வருமானத்தை மதுக்கடைகளில் செலவழித்து வருகின்றனர். அந்த அளவுக்கு மதுக்கடைகளை அரசு திறந்து வைத்துள்ளது. இன்று ஏழை எளிய மக்கள் மீதி பணத்தில் லாட்டரி சீட்டுக்கள் வாங்கும் விதமாக லாட்டரி விற்பனையை தொடங்குவதை புதுச்சேரி பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.
புதுவையில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை தொடங்கவும், நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்தவும் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. புதிய தொழிற்சாலைகள் தொடங்க எந்த சலுகைகளையோ, எளிமையான திட்டங்களையோ கொண்டு வர வில்லை. படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ஏதுவாக கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தாத அரசு, வருமானம் இல்லை என்ற காரணத்தை காட்டி ஏழை மக்களிடம் லாட்டரி சீட்டு விற்று அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவது நியாயமா?
புதுச்சேரி மக்களால் வாங்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவை வெளிமாநிலங்களில் தயாரிக்கப்பட்டு புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது. புதுவை மக்களால் வாங்கப்படும் பொருட்களை கூட புதுச்சேரியில் தயாரிக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த காலங்களில் புதுச்சேரியில் தினம் தினம் லாட்டரி சீட்டுகள் வாங்கி அதன் மூலம் பரம ஏழையாகி தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். லாட்டரி விற்பனையை மீண்டும் கொண்டு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியை புதுச்சேரி மக்கள் தூக்கி எறிய வேண்டும். இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிடவில்லை என்றால் பா.ஜ.க. சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story