மருத்துவ சேவையை வணிக நோக்கத்தில் செய்யக்கூடாது டாக்டர் சாந்தா பேச்சு
மருத்துவ சேவையை வணிக நோக்கத்தில் செய்யக்கூடாது என்று சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா பேசினார்.
திருச்சி,
திருச்சியில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் உலக பெண்கள் தினவிழா திருச்சியில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா தலைமை தாங்கினார். விஸ்வநாதன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஹேமாமாலினி கோவிந்தராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் வி.சாந்தா கலந்து கொண்டு, இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள் பற்றிய கையேட்டினை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை டாக்டர் கோவிந்தராஜ் பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து டாக்டர் வி.சாந்தா பேசியதாவது:–
பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி. அந்த காலத்திலேயே கல்லூரிபடிப்பை முடித்து தேவதாசி முறை ஒழிப்பு உள்பட பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டார். பெண்கள் புற்றுநோயை கண்டறியும் மாமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்போது தான் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை உடனடியாக தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க முடியும். எவ்வளவு சீக்கிரம் புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கிறோமோ? அவ்வளவு சீக்கிரம் அவர்களை காப்பாற்றி விட முடியும்.
புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களால் அவர்களுடைய குடும்பத்துக்கும் பெரும் இழப்பு ஏற்படும். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மனிதநேயத்தோடு சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவ சேவையை வணிகநோக்கத்தில் செய்யக்கூடாது. தற்போது பெண்கள் அதிகம் படித்து இருந்தாலும் முடிவு எடுக்கும் திறன் இல்லாமல் இருக்கிறார்கள். படித்த பெண்கள் துணிவுடன் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். வாழ்க்கையில் சாதனை படைத்த பெண்களை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சாதனை படைத்த பெண்களான ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் ஜெயந்தி, ஐஸ்கிரீம் நிறுவன உரிமையாளர் ஜுலியட் வளர்மதி, தனியார் புற்றுநோய் நிறுவன பெண் அதிகாரி ஸ்ரீவித்யா ரமேஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அனைத்து பெண்கள் சங்கங்கள் ஒருங்கிணைப்பாளர் ஜெம்பகா ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். முடிவில் யுகா அமைப்பின் தலைவரும், எனேபிள் இணை செயலாளருமான அல்லிராணி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story