நெல்லையில் கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது
நெல்லை சந்திப்பில் உள்ள கோவிலில் குத்துவிளக்கு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,

சுடலை மாடசாமி கோவில்
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் வேம்படி சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி இரவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பிறகு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த குத்துவிளக்கை திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து கோவில் பூசாரி சின்னத்துரை, நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு வாலிபர் அந்த கோவிலில் சுவாமி பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த நாணயங்களை எடுத்துக்கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர்.
கைது
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், இசக்கித்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் சிவந்திப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் தமிழ்செல்வன் (வயது 25) என்பதும், கோவிலில் குத்துவிளக்கு திருடியதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் நாணயங்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story