பாரம்பரியமான விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
பாரம்பரியமான விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர்,
25 புதிய வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், வேளாண் அறிவியல் மையங்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கு, பயிர் ரகங்களுக்கான பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை கரூர் மாவட்ட விவசாயிகள் தொலைக்காட்சியில் கண்டு பயன்பெறும் வகையிலும், கருத்தரங்கிற்கும் புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் கரூரில் கொங்கு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் தாவர வகை பயிர் ரகங்களுக்கான பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான உரிமை சட்டம் 2001 குறித்த விளக்க புத்தகத்தை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், ‘‘நகரமயமாகுதல், வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் விவசாயத்திற்கான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீர், நிலம் மாசுபடுதலை தடுக்க வேண்டும். செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். இயற்கை சார்ந்த விவசாயம் மிக முக்கியமாகும். பாரம்பரியமான விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும். உணவு பொருட்கள் மிக அத்தியாவசியமானது. நல்ல உணவுகளால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் வேளாண்மையில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது’’ என்றார்.
நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், ‘‘விவசாயம் இல்லையென்றால் மனிதன் வாழ முடியாது. விவசாயிகளுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் உழைப்பால் இந்த நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. நாட்டில் உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. விவசாயிகளின் வருமானங்கள் இரட்டிப்பாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை பெருக்க ஒன்றிய அளவில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயந்தி, நுகர்வோர் விழிப்புணர்வு சங்க உறுப்பினர் காளியப்பன், மொத்த பண்டக விற்பனை சாலை தலைவர் நெடுஞ்செழியன், விவசாயிகள், பள்ளி மாணவ– மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்களை எடுத்து கூறி விவசாயத்தை மேம்படுத்த பல கருத்துக்களை தெரிவித்தனர். கருத்தரங்கின் ஒரு பகுதியில் மரம் நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் தொடர்பாகவும், விவசாயிகள் விளைவித்த பொருட்கள், இயற்கை சார்ந்த பொருட்கள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். முன்னதாக வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்செல்வி வரவேற்று பேசினார். முடிவில் உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமுருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய காட்சி நேரிடையாக எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டன. அதனை மொழிபெயர்ந்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.
கருத்தரங்கை தொடர்ந்து கரூர் நகராட்சி வார்டு எண் 22–ல் ஈஸ்வரன் கோவில் பின்புறம், வார்டு எண் 23–ல் ஐந்து ரோடு இறக்கத்திலுள்ள வேலு ஆரம்பப்பள்ளி அருகே, வார்டு எண் 24–ல் வ.உ.சி.தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, வார்டு எண் 25–ல் பள்ளி வாசல் அருகே உள்ள மாவடியான கோவில் பகுதி ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெற்றனர். மேலும் மேற்கண்ட வார்டுகளுக்கு நடந்து சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story