குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் நேற்று குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:–
குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தினசரி சாலையோர கடைகளில் வசூல் செய்யும் உரிமத்திற்காக ஏலம் விடப்பட்டது. இதற்கு அரசு நிர்ணயித்த ஏலத்தொகையாக ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தொகை கூடுதலாக இருந்த காரணத்தால் 3 முறை யாரும் கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4–வது முறையாக ஏலம் நடத்தப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ரூ.13 லட்சத்து 25 ஆயிரத்திற்கு ஏலதாரர் ஒருவரிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ளனர். இந்த தொகை மற்றும் இத்தொகையின் மூன்றில் ஒரு பங்கு சேர்த்து நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினால் மறு ஏலம் நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமால் என்னிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று (நேற்று) நகராட்சி அலுவலகத்தில் பணம் கட்ட வந்தபோது பணத்தை வசூலிப்பவர் வாங்கவில்லை. இதுகுறித்து கேட்போது, ஆணையர் வாங்கவேண்டாம் எனக்கூறியதாக அவர் தெரிவித்தார். என்னை இன்று (நேற்று) பணம் கட்ட சொல்லிவிட்டு, பணத்தை வாங்கக்கூடாதென அலுவலரிடம் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே எனக்கு ஆணையர் உரிய பதில் அளிக்கவேண்டும் அதுவரை நகராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்திருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் அமர்ந்திருந்தனர். மாலை வரை காத்திருந்தும் ஆணையர் வராத காரணத்தால் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story