தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில்


தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில்
x
தினத்தந்தி 18 March 2018 4:05 AM IST (Updated: 18 March 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவசாயிகளின் வீடு, வீடாக...


பா.ஜனதா சார்பில் வருகிற 21-ந் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக, அவர்களது வீடு, வீடாக சென்று பிரசாரம் தொடங்கி நடைபெற உள்ளது. அப்போது விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் பெறப்படும். மேலும் விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, எடியூரப்பா எழுதிய கடிதமும் விவசாயிகளிடம் வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் 3,500 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கவும், அவர்களின் நலனுக்காகவும் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது.

பிரசாரத்தின் இறுதியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8,9 மற்றும் 10-ந் தேதிகளில் சட்டசபை தொகுதிகளில் விவசாயிகளுடன் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. இதில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் உணவு தானியங்களை கொண்டு சமையல் செய்து சமபந்தி விருந்து அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடன் தள்ளுபடி செய்யப்படுமா?


பின்னர் அவரிடம், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கர்நாடக அரசு மறுத்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம், குஜராத் மாநில அரசுகள் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக, எங்களது தேர்தல் அறிக்கையை பார்த்து அறிந்து கொள்வீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story