பெண் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் கைது திருட்டு செல்போன்களை வாங்கியவரும் சிக்கினார்


பெண் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் கைது திருட்டு செல்போன்களை வாங்கியவரும் சிக்கினார்
x
தினத்தந்தி 18 March 2018 4:30 AM IST (Updated: 18 March 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெண் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் திருட்டு செல்போன்களை வாங்கியவரும் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பெண் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் திருட்டு செல்போன்களை வாங்கியவரும் கைது செய்யப்பட்டார்.

வாலிபர் சிக்கினார்

மும்பை அந்தேரி செல்லும் மின்சார ரெயிலில் நேற்று முன் தினம் இரவு நஸ்ரின் என்ற பெண் சென்று கொண்டு இருந்தார். ரெயில் இரவு 9.30 மணியளவில் கார் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது திடீரென பெண்கள் பெட்டிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் நஸ்ரினின் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நஸ்ரின் திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற பயணிகள் செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

மாணவியிடம் செல்போன் பறித்தவர்

விசாரணையில் பிடிபட்டவரின் பெயர் ஹலீம் மன்னாகான் (வயது20) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சாந்தாகுருஸ் ரெயில்நிலையத்தில் மிலோனி (18) என்ற மாணவி உள்பட மேலும் பல பெண் பயணிகளிடம் இதே பாணியில் செல்போனை பறித்து உள்ளார். இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹலீம் மன்னாகான் கொடுத்த தகவலின் பேரில், அவரிடம் இருந்து திருட்டு செல்போன்களை வாங்கிய ருபல் சேக் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story