இரட்டை கொலை வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
கொளத்தூர் அருகே இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்,
கொளத்தூர் அருகே உள்ள கோமாளி காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 68). இவருடைய மனைவி தங்கம்மாள்(60). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குருசாமி, தங்கம்மாள் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை பணத்திற்காக நடைபெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இந்த கொலை வழக்கு தொடர்பாக கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்த நல்லசாமி (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடைய கோமாளிகாட்டை சேர்ந்த சந்திரன் (23) வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, கைது செய்யப்பட்டார். இவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நல்லசாமி, சந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரோகிணி நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள நல்லசாமி, சந்திரன் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.

Related Tags :
Next Story