மேல்மருவத்தூர் கோவிலில் தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம்
மேல்மருவத்தூர் கோவிலில் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி பங்காரு அடிகளார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுராந்தகம்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தெலுங்கு புத்தாண்டை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் விமரிசையாக கொண்டாடினர். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்காருஅடிகளார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிளை வழங்கினார்.
விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ஆதிபராசக்தி கருவறையில் சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டன.
சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சங்கர் பாபு அனைவரையும் வரவேற்றார். கங்காதரன் நன்றியுரை வழங்கினார். பாஸ்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Tags :
Next Story