விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறையும், காவல்துறையும் இணைந்து சாலை விபத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் ‘ஹெல்மெட்’ அணிந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக விழுப்புரம் ரெயில் நிலையம் வரை சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், பிரான்சிஸ், கவிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story