நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தபோது 9-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான் .
நெல்லை,

பள்ளிக்கூட மாணவர்கள்
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இங்கு 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான தென்காசி அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் அப்துல் கபார் (வயது 14), கழுகுமலை தெற்கு ரதவீதியை சேர்ந்த பீர்முகமது மகன் அன்வர் (15), ஏர்வாடி பாத்திமா தெருவை சேர்ந்த பீர்முகமது மகன் அப்துல் ரகுமான் (13) ஆகிய 3 பேரும் நேற்று விடுதியில் இருந்து வெளியே வந்தனர்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிக்கு வந்து, செஸ் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டனர். அப்போது தாமிரபரணி ஆற்றை கண்ட அவர்கள் 3 பேருக்கும், ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
தண்ணீரில் மூழ்கினான்
இதையடுத்து நண்பர்கள் 3 பேரும் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள படிக்கட்டு வழியாக தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கினர். அங்கு பாலத்துக்கு கீழ் பகுதியில் தண்ணீருக்குள் இறங்கி குளித்தனர். உற்சாகமாக மிகுதியில் 3 பேரும் ஆற்றின் நடுவே உள்ள ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீச்சல் சரியாக தெரியாத 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
இதனை அந்த பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கண்டனர். அவர்கள் தண்ணீருக்குள் பாய்ந்து சென்று அன்வர் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய 2 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். ஆனால், அப்துல் கபார் மட்டும் தண்ணீர் மூழ்கி காணாமல் போய் விட்டான்.
பிணமாக மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி அப்துல் கபாரை தேடினர். சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு அவன் பிணமாக மீட்கப்பட்டான். தங்களோடு குளித்த நண்பர் ஆற்றில் மூழ்கி இறந்ததால் அன்வர், அப்துல் ரகுமான் ஆகியோர் கதறி அழுதனர்.
பின்னர் அப்துல் கபார் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story