கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக குழாய்கள் பக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவொற்றியூர்,
இத்திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை உடனே கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடசென்னை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக மீனவர் மக்கள் முன்னணி தலைவர் கோசுமணி தலைமை தாங்கினார். த.மா.கா. மாநில செயலாளர் சுகுமாரன், பகுதி தலைவர் கே.ஆர்.சிவகுமார், வக்கீல் ரமேஷ்சந்தர் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடக்கோரி சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

Related Tags :
Next Story