தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி
தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் இயக்கத்தினரின் நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறினார்.
தர்மபுரி,
கேள்வி:- முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து பேசினீர்களா?
பதில்:- முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவை குறித்து பேசினேன். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நக்சல் இயக்கங்களின் செயல்பாடு அதிகமாக இருந்தது. அரசும், காவல்துறையும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது நமது மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நக்சல்களின் செயல்பாடு நமது மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்காக நக்சல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். நக்சல் செயல்பாட்டை முழுமையாக தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் பேசினேன்.
கேள்வி:- தர்மபுரி மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டதா?
பதில்:- தர்மபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுமையாக தடுப்பதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் விளக்கினேன். மேற்கண்ட வகைகளை சேர்ந்த குற்றங்கள் நடப்பதற்கு வேலைதேடி குடும்ப தலைவர்கள் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்தல் முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தடயவியல் ஆய்வகம்
கேள்வி:-தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் பாதிப்பு கிராமங்களின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
பதில்:- தர்மபுரி மாவட்டத்தில் 36 கிராமங்கள் நக்சல் பாதிப்பு கொண்டவை. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக காவல்துறைமூலம் வேளாண் உதவி கருவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுவழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நக்சல் பாதிப்பு பகுதிகளில் வளர்ச்சியை அதிகரிக்க மாநாட்டில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி நக்சல் பாதிப்பு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளோம். தொழில்பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி:-தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறையின் மேம்பாட்டிற்காக புதிய திட்டங்கள் ஏதேனும் செயல்படுத்தப்பட உள்ளதா?
பதில்:- பாலக்கோட்டை தலைமையிடமாக கொண்டு புதிய காவல்துறை உட்கோட்டம் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி செயல் படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். குற்றச்செயல்கள் தொடர்பான தடயவியல் பரிசோதனைகளை செய்ய தர்மபுரி மாவட்டத்தில் தடயவியல் ஆய்வகம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் தர்மபுரியில் காவல்துறையின் தடயவியல் ஆய்வகம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தொடர்பான தடயவியல் பரிசோதனைகளின் முடிவுகளை இங்கேயே விரைவாக பெறமுடியும். இதனால் வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்தி முடிக்க வாய்ப்பு உருவாகும். இந்த தடயவியல் ஆய்வகம் தற்காலிகமாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும். தடயவியல் ஆய்வகத்திற்கு கட்டிடங்கள் கட்டபட்ட பின்னர் நிரந்தர இடத்தில் செயல்படும்.
புதிய போலீஸ் நிலையம்
கேள்வி:- தர்மபுரி மாவட்டத்தில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா?
பதில்:- தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் புதிய போலீஸ்நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் அங்கு போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.
கேள்வி:-தொடர்ச்சியான பணியால் போலீசாருக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- தொடர்ச்சியான பணியால் போலீசாருக்கு போதிய அளவு தூக்கமின்மை, குடும்ப பொறுப்புகளில் முழுகவனம் செலுத்தமுடியாத நிலை, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய பிரச்சினைகள் மனநிலை தொடர்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இதைத்தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் மனநிலையை மேம்படுத்த உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான டாக்டர்கள், உளவியல் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் பணி விரைவில் தொடங்கும்.
கேள்வி:- விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
பதில்:- தர்மபுரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன்காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு விபத்து உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. விபத்து உயிரிழப்புகளை குறைத்ததில் தர்மபுரி மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்து உள்ளது. இதற்காக அரசின் பாராட்டையும் பெற்று உள்ளோம். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டில் இதுவரை உள்ள காலகட்டத்தில் விபத்து உயிரிழப்பு 28 சதவீதம் குறைந்துள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கேள்வி:- தர்மபுரி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுஇடங்களில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்கள் குறித்து நகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Tags :
Next Story