சாமல்பட்டி ரெயில்வே தரை பாலத்தில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு


சாமல்பட்டி ரெயில்வே தரை பாலத்தில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

சாமல்பட்டி ரெயில்வே தரை பாலத்தில் மழைநீர் தேங்குவதால் போக்கு வரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியில் ரெயில்வே தரை பாலம் உள்ளது. இந்த வழியாக தினமும் பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தரை பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை, சாமல்பட்டி, காரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் சாமல்பட்டி ரெயில்வே தரை பாலத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. இதனால் தரை பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு சிறிய வாகனங்கள் ஒவ்வொன்றாக சென்றன. தேங்கிய மழைநீரில் கனரக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மழைக் காலங்களில் தரை பாலத்தில் இதுபோல் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், தண்ணீர் தேங்காமல் வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story