காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம்: அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் திருமாவளவன் பேட்டி
மதுரை விமான நிலையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுரை,
காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர் மத்திய அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய நீர்வளத்துறை மந்திரி ஆணையம் அமைக்க கூறவில்லை என கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்படும்.
பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட வேண்டும். மத்திய அரசு தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனை எதிர்த்து எனது தலைமையில் வரும் 24–ந்தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அ.தி.மு.க.வில் ஜனநாய ரீதியாக கருத்து சொன்ன கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது. இப்படி நடவடிக்கை எடுப்பவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எப்படி ஆதரவாக இருப்பார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மட்டுமல்ல பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.