கூட்டுறவு தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


கூட்டுறவு தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2018 3:30 AM IST (Updated: 19 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில், மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் ராஜேந்திரன் கூறியதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 268 சங்கங்களுக்கும், பால்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 85 சங்கங்களுக்கும், மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 5 சங்கங்களுக்கும், வீட்டுவசதித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 சங்கங்களுக்கும், கதர் மற்றும் கிராமத் தொழில் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 6 சங்கங்களுக்கும், தொழில்கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 4 சங்கங்களுக்கும், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 11 சங்கங்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 55 சங்கங்களுக்கும், வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 5 சங்கங்களுக்கும், சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 6 சங்கங்களுக்கும், பட்டுவளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 3 சங்கங்களுக்கும் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் கட்டுப்பாட்டிலுள்ள 1 சங்கத்துக்கும் ஆக மொத்தம் 466 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்டத்தில் நான்கு நிலைகளில் முறையே ஏப்ரல் 2, 7, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இட ஒதுக்கீடு

கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:–

தேர்தல் விதிமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தேர்தலை ஜனநாயகமாக நடத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. எவ்வித முரண்பாடுகளுமின்றி தேர்தலை நடத்த வேண்டும். இட ஓதுக்கீட்டினை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். எனவே வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிமுறைகளை முழுமையாகவும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கூடுதல் பதிவாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர், மண்டல இணை பதிவாளர் ஆரோக்கியசுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story