பைக்காரா அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை
பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறுவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா அணை உள்ளது. இங்கு சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது. கேரளா- கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக பைக்காரா அணை மற்றும் அருவியை பார்வையிட்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தருகின்றனர்.
கூடலூர், முதுமலை தொடங்கி ஊசிமலை, தவளமலை, நடுவட்டம் பகுதியில் உள்ள காட்சி முனைகள் மற்றும் சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து விட்டு பைக்காராவுக்கு வருகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் அளவுக்கு ஆபத்துகளும் அதிகளவு உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அதை பற்றி கண்டு கொள்வது இல்லை. ஊசிமலை காட்சி முனையில் மரண பள்ளத்தாக்குகள் உள்ளன.
ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் இரும்பு தடுப்பை தாண்டி செல்பி எடுப்பது, பாறைகளில் அமர்ந்து புகைப்படம் எடுப்பது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பைக்காரா அருவியில் ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை காண முடிகிறது. மேலும் பைக்காரா அணையில் பாதுகாப்பாக படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு பைக்காரா அணை படகு குழாம் ஒரு வரப் பிரசாதமாக உள்ளது.
சில சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்துக்கு சென்று விளையாடி வருகின்றனர். சில சமயங்களில் தவறி அணைக்குள் விழவும் வாய்ப்பு உள்ளது.
எனவே பைக்காரா அருவி மற்றும் அணை பகுதியில் சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story