ஊட்டி காந்தலில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி காந்தலில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே சுப்பிரமணியர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளன. மதுக்கடையால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மது குடித்து விட்டு சிலர் தகாத வார்த்தைகளை பேசுவதால், அந்த வழியாக பெண்கள் நடந்து செல்ல முடிவது இல்லை.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தில் மனுக் கள் அளிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அகற்றப்பட வில்லை.
இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட இந்து முன்னணி சார்பில், டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியும், வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அதிகாரிகளை கண்டித்தும் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதனால் இந்து முன்னணியினர் டாஸ்மாக் மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஊட்டி நகர தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story