ஊதிய குறைபாடுகளை களைய கோரி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தம்
ஊதிய குறைபாடுகளை களைய கோரி விடைத்தாள் திருத்தும் பணியினை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ராஜரெத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைமையிட செயலாளர் அகிலன், மாவட்ட தணிக்கையாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ரஜினி, மாவட்ட துணைத்தலைவர்கள் பண்டரிநாதன், குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் நடனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மணிவாசகன், நிருபர்களிடம் கூறியதாவது:-
6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை விட ரூ.3 ஆயிரத்து 400 குறைவாக ஊதியம் வாங்குகின்றனர்.
எனவே ஊதியக்குழுவில் உள்ள ஊதிய குறைபாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியினை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். வருகிற மே மாதம் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.
கோடை விடுமுறையில் விடைத்தாள் திருத்தும் நாட்களுக்கு இணையான ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். 2004 முதல் 2006-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணிக்கு சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை பணிக்கு சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story