நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் முறையாக நடைபெற வலியுறுத்தி சிவனடியார்கள் திருமுறை பாடி ஊர்வலம்
நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் முறையாக நடைபெற வலியுறுத்தி நேற்று சிவனடியார்கள் மற்றும் திருக்கோவில்கள் வழிபடுவோர் சங்கத்தினர் திருமுறை பாடி ஊர்வலம் சென்றனர்.
நெல்லை,

திருமுறை பாடி ஊர்வலம்
நெல்லை திருக்கோவில்கள் வழிபடுவோர் சங்கத்தினர் மற்றும் சிவனடியார்கள், நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர்கள் இணைந்து நேற்று நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவில் முன்பு இருந்து திருமுறை பாடிய படி ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தை சங்க பொதுச்செயலாளர் கயிலை கண்ணன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். ஊர்வலம் ஈசான விநாயகர் கோவில் முன்பு தொடங்கி சொக்கப்பனை முக்கு, பாரதியார் தெரு வழியாக வாகையடிமுனை சென்றடைந்தது. ஊர்வலத்தில் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. இதில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முறையாக நடத்த வலியுறுத்தல்
நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம், ஆகம முறைப்படியே நடத்தவேண்டும். திருப்பணிக்குழு அமைத்து திருப்பணி வேலைகள் முழுவதும் முடிக்கப்படவேண்டும். இந்த கோவில் அர்ச்சகர்களை கொண்டே கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் நெல்லை மண்டல முன்னாள் தலைவர் வெங்கடசுப்பிரமணியன், இந்து முன்னணி வக்கீல் குற்றாலநாதன், பக்தர் பேரவை குணசீலன், நிர்வாகிகள் வள்ளிநாயகம், அகத்தீசுவரன், இலகுமணி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story