பஞ்சாலைகள், தனியார் மில்களில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
பஞ்சாலைகள் மற்றும் தனியார் மில்களில் பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை,
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க 81-வது ஆண்டு விழா மற்றும் நிறுவன தலைவர் என்.ஜி.ராமசாமியின் பிறந்தநாள் விழா ஆகியவை கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு சங்க பொதுச்செயலாளரும், தமிழ் மாநில எச்.எம்.எஸ். கவுரவ தலைவருமான ஏ.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
தியாகி கே.வி.ராமசாமியின் உருவப்படத்தை சங்க துணைத்தலைவர் மருதாசலம், தியாகி கே.பி.திருவேங்கடத்தின் உருவப்படத்தை சங்க செயலாளர் காட்டூர் சுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவை, சங்க தலைவரும், தமிழ் மாநில எச்.எம்.எஸ். சங்க செயலாளருமான டி.எஸ்.ராஜாமணி தொடங்கி வைத்தார். இதில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
கோவை மாநகர பகுதியில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. இதற்கு தீர்வுகாண அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையம் வரை மேம்பாலம் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை-திருச்சி ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி திருச்சி ரோட்டிலும் அரசு ஆஸ்பத்திரி முதல் எல் அண்டு டி பைபாஸ் ரோடு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
என்.டி.சி. மில்கள் மற்றும் தனியார் மில்களில் 2 ஆண்டு பணிக்காலத்தில் 480 பணி நாட்கள் பூர்த்தி செய்து இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுபோன்று தென் மண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 14 பஞ்சாலைகளில் பணியாளர்கள் ஒப்பந்தம் கடந்த 15.11.2017-ந் தேதி ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி பல ஆண்டு களாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்தியாவில் மொத்த நூல் உற்பத்தியில் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாலைகளில் மட்டும் 55 சதவீத நூல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது அது 45 சதவீதமாக குறைந்து உள்ளது. தமிழகம் அதிகளவில் நூல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களில் அரசு சார்பில் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சலுகைகள் மிக குறைவாக இருப்பதால் பஞ்சாலைகள் குறைந்து கொண்டே செல்கிறது. எனவே பஞ்சாலைகளை அரசு காப்பாற்ற வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் சங்க செயலாளர் ஜி.மனோகரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story