பாவூர்சத்திரம் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
பாவூர்சத்திரம் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் மூழ்கின
நெல்லை மாவட்டம் தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர், மேலப்பாவூர் பகுதியில் ஏராளமான நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் இந்த மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரம் சாய்ந்து விழுந்தது
சேரன்மாதேவியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் அங்கிருந்து நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே சுடுகாட்டு பாதையில் உள்ள பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. மேலும் அப்பகுதியில் 2 மின்கம்பங்களும் முறிந்தன. இதனால் மின்ஒயர்கள் தொங்கியது. அப்பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்கம்பங்களை மாற்றினர். பின்னர், அந்த பகுதியில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story