நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயற்சி: பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் 25 பேர் கைது
முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுவை கரையாம்புத்தூர் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்க அப்பகுதி மக்கள் பீடம் அமைத்திருந்தனர். ஆனால் அங்கு சிலை அமைக்க அனுமதி மறுத்த வருவாய்த்துறையினர் காவல்துறையினர் உதவியுடன் சிலையின் பீடத்தை இடித்து அகற்றினார்கள்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிடப்போவதாக பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
இதற்காக அவர்கள் காந்தி வீதி சின்ன மணிக்கூண்டு அருகே கூடினார்கள். அங்கிருந்து ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்தி நாத் தலைமையில் எல்லையம்மன்கோவில் வீதியில் உள்ள நாராயணசாமியின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த ஒதியஞ்சாலை போலீசார் அங்கேயே அவர்களை மடக்கி நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் புதுவை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் முதல்-அமைச்சரின் வீட்டை நோக்கி செல்லவும் முற்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் அலைகள் இயக்க அமைப்பாளர் வீர.பாரதி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story