கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள கோடீஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 31 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தேரோட்டமும் நடக்கவில்லை. இதன் காரணமாக கோவிலுக்கு சொந்தமான தேர், சாமி வாகனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. தேரிலும், வாகனங்களிலும் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மர சிற்பங்கள் வீணாக கிடப்பது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. நிறுத்தப்பட்ட பங்குனி உத்திர திருவிழாவை மீண்டும் நடத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கிராம மக்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கிராம மக்கள், கோவில் திருவிழாவின்போது கொடி மரத்தில் ஏற்றப்படும் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோடீஸ்வரர் கோவில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோடீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை நடத்தவில்லை என்றால் சுவாமிமலை கோவிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் வெளியேற வேண்டும். பல ஆண்டுகளாக விழா நடைபெறாததால் கோவிலில் உள்ள பழமையான உற்சவமூர்த்தி சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருடி விற்று விட்டார்களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கோவிலில் சிலைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டும் விழா நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கிராம மக்கள் ஒன்று திரண்டு விழாவை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story