4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓட்டம்-போலீசார் விசாரணை
கருங்கல் அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுத்திய காரை நிறுத்தி விட்டு 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்,
கருங்கல் அருகே பாலூர் திரேஷ்புரம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் ஒரு சொகுசு கார் வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் ஆகியவற்றின் மீது மோதி நின்றது. இதனால் அதன் பின்னால் வந்த மற்றொரு கார் அதன்மீது மோதியது.
4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட்டில் வந்த வாலிபர்களுக்கு காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் மோதிய காரில் இருந்த 2 வாலிபர்கள் கதவை திறந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து ஏற்படுத்திய காரை சோதனை செய்தனர். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்த வண்டி நம்பரும், ஆவணங்களில் இருந்த நம்பரும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். மேலும், காரை போலீஸ்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் காரில் வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியவர்களுக்கு, அந்த பகுதியில் நடந்த குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story