கொடுக்கல்–வாங்கல் தகராறு: கார் டிரைவரை குத்திக்கொன்ற வாலிபர் கைது
கொடுக்கல்–வாங்கல் தகராறில் கார் டிரைவரை குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம்,
நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (27). இவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நத்தத்தில் இருந்து செந்துறை செல்லும் அவுட்டர் சாலை பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த முருகேசன், ரமேசை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேசை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த ரமேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய முருகேசனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில் ஆவிச்சிபட்டி பிரிவு பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முருகேசனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர் நத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story