காவல்துறையினருக்கான உடல்நலன் பேணுதல் குறித்த பயிற்சி கருத்தரங்கு


காவல்துறையினருக்கான உடல்நலன் பேணுதல் குறித்த பயிற்சி கருத்தரங்கு
x
தினத்தந்தி 19 March 2018 4:00 AM IST (Updated: 19 March 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகர காவல்துறை மற்றும் தனியார் கல்லூரி இணைந்து காவல்துறையினருக்கான உடல்நலன் பேணுதல் குறித்த பயிற்சி கருத்தரங்கை திருச்சியில் நேற்று நடத்தின.

திருச்சி,

திருச்சி மாநகர காவல்துறை மற்றும் தனியார் கல்லூரி இணைந்து காவல்துறையினருக்கான உடல்நலன் பேணுதல் குறித்த பயிற்சி கருத்தரங்கை திருச்சியில் நேற்று நடத்தின. இதில் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்கள் சக்திகணேசன், மயில்வாகனன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். இதில் போலீஸ் உதவி கமி‌ஷனர் விக்னேஷ்வரன், சென்னை மண்டல என்.எஸ்.எஸ். இயக்குனர் சாமுவேல் செல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், காவல்துறையினர் உடல்நலத்தை பேணி பாதுகாத்து தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மக்களுக்கு சேவையாற்ற எப்போதும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உணவு பழக்கம், யோகா பயிற்சி உள்ளிட்டவைகளை கடைபிடிப்பது எப்படி?. சவால் நிறைந்த பிரச்சினைகளை கையாளுவது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்த 300–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story